அடேங்கப்பா.! எஸ் ஜே சூர்யா திருமணம் செய்து கொள்ளப் போகும் நடிகை இவரா.?!  - Seithipunal
Seithipunal


அஜித் குமார் கேரியரில் முக்கிய படமாக அமைந்த வாலி திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய குஷி மற்றும் நியூ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

நியூ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிய இவர் அதனைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, இறைவி,என பல படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். தற்போது குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் மெர்சல், மாநாடு, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில்  நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸுடன் ஜிகர்தண்டா 2 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா இதுநாள்வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் திரைப்பட நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த செய்திகளின்படி கடமையை செய் என்ற திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா  யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்குமிடையே காதல் பற்றிக் கொண்டதாகவும்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டன. இந்நிலையில் எஸ் ஜே சூர்யாவும் யாஷிகா ஆனந்தும் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sj surya going to marry this actress


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->