சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்?.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் மாவீரன். இதனை யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கி வருகிறார். 

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வரும்  வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in maaveeran movie trailer release on July 2


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->