நடிகர் விஜயுடன் முக்கிய படத்தில் நடிக்கவிருந்த சிம்பு..! நல்ல வாய்ப்பை மிஸ் பன்னிட்டாரே.?! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வெளியான 'நண்பன்' படத்தில் இடம்பெற்ற ஜீவா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'நண்பன்'. ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான முதல் படமும் இதுதான். அதனால் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு கொடுத்தனர்.

தற்போது டிவியில் போட்டாலும் பலரும் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு நண்பன் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த படத்தில் விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தனர். கதாநாயகியாக இலியானா நடித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது 'நண்பன்' படத்தில் இடம்பெற்ற ஜீவா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு தான் என்றும், பின் இவரால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu missed Nanban movie


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal