பாலியல் தொல்லை - மனம் விட்டு பேசிய சன்னி லியோன்! - Seithipunal
Seithipunal


நடிகை சன்னி லியோன், நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும் என்றும், இழப்புகளை பற்றி கவலைப்படாமல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்ல வேண்டும் என்றும், வெளியேற வேண்டிய இடத்தில் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், நாம்தான் நமக்கான எல்லைகளை தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய அவர், இழப்புகளை பற்றி கவலைப்படாமல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual harassment Sunny Leone spoke her heart out


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->