பிரபல சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!!
serial actress vj chitra suicide
பிரபல விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக தற்போது உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கிய சித்ராவுக்கு முல்லை என்ற கதாபாத்திரம் மிகுந்த பெருமை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நடிகை சித்ராவுக்கு தனிப் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவந்தார். சித்ராவுக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு எடுத்துள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
English Summary
serial actress vj chitra suicide