கள்ளக்காதலனை கொன்ற பிரபல சீரியல் நடிகை தேவி..! அதிர்ச்சியில் திரைத்துறையினர்..!
serial actress devipriya killed his illegal lover
சின்னத்திரை நடிகையான தேவி சின்னத்திரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவருகிறார். மேலும் இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி சங்கர் என்ற கணவர் இருக்கிறார். இந்த நிலையில் தேவிக்கும் துணை நடிகர் ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
விஷயம் தெரிந்த தேவியின் கணவர் சங்கர், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரவியுடனான உறவை தேவி துண்டித்து கொண்டார்.
அதோடு வீட்டையும் மாற்றிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கொளத்தூரில் இருக்கும் தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு சென்ற ரவி, குடிபோதையில் தகராறு செய்திருக்கிறான்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேவி அவரது கணவர் சங்கர், தேவியின் சகோதரி மற்றும் அவரின் கணவர் சவரியார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக் கட்டை மற்றும் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
serial actress devipriya killed his illegal lover