விஷால் படத்தில் நடிக்கவுள்ள செல்வராகவன்.?! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் செல்வராகவன். இறுதியாக அவரது இயக்கத்தில் தனுஷ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் அதிகளவு வரவேற்பை பெறவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியாகிய சாணிக்காகிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் மூலம் அவர் ஒரு நல்ல நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இரு படங்களிலும் அவருடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தன.இதனையடுத்து, இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவாகி வருகின்ற பகாசுரன் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இத்தகைய நிலையில் தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகி வருகின்ற மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார் எனும் தகவல் லீக்காகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விஷயம்தான். இதில், சமீபத்தில் தெலுங்கு நடிகரான சுனிலும் நடிக்கிறார் என ஒரு போஸ்டர் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் செல்வராகவன் இப்படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaragavan may act in vishal movie


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal