மீண்டும் சினிமாவில் களமிறங்கும் சீமான்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் சீமான். தற்போது இவர், ‘நாம் தமிழர் கட்சி’ மூலம் அரசியலில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சீமான் மீண்டும் சினிமாவில் நடிகராக திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சீமான் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

அந்த காலத்து அப்பா, தற்போதைய மகன் இவர்களுக்கிடையில் நடக்கும் தினசரி போராட்டத்தை மையப்படுத்திய கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.  விவசாயம், இயற்கை என பழமை மாறாத அப்பா கேரக்டரில்தான் சீமான் நடிக்கப் போகிறாராம். 

சீமானின் இரு பிள்ளைகளாக நயன்தாரா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seeman acting in lic movie


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->