அச்சு அசலா சாயிஷா போலவே இருக்கும்.. ஆர்யா குழந்தை.! வைரல் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கிய டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

மேலும் பா.இரஞ்சித் இயக்கும் "சர்பேட்டா" படத்தில் ஆர்யா நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்தார். குழந்தை பிறந்து சில ஆண்டுகள் வரை அவர்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தார்கள். 

இந்த நிலையில் தற்போது நன்றாக வளர்ந்த அந்த குழந்தையின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதை கண்ட ரசிகர்கள் பலரும் அப்படியே அவர் சாயிஷா போலவே இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sayeesha Baby Photo viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->