தளபதிக்கு தாயாவது நீண்ட நாள் ஆசை..! சரண்யா பொன்வன்ணன் ஏக்கம்.!
saranya ponvannan want movie with vijay
இயக்குனர் சீனு ராமசாமி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்க வருகிறார். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆண்டிபட்டி பகுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் படக்குழுவினருடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் குமாருக்கு தாயாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கிரீடம் படத்தில் தலக்கு அம்மாவாக நடித்துவிட்டதாகவும், அதுபோல விஜய்க்கு ஒரு படத்தில் அம்மாவாக நடிக்க வேண்டும் இருப்பது தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக சிவகாசி மற்றும் குருவி படத்தில் விஜய்க்கு அண்ணியாக அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
saranya ponvannan want movie with vijay