பிரபல நடிகருக்கு புற்று நோய்! திரண்டு வந்த திரையுலகம்!  - Seithipunal
Seithipunal


60 வயதான பிரபல பாலிவுட் இந்தி நடிகர் சஞ்சய் தத் -க்கு நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பாலிவுட் நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டவே,   மும்பை லீலாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள்  ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்தனர். 

இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டு குணமடைந்தார்.

இந்நிலையில், சஞ்சய் தத்துக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக டிவிட்டரில்  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sanjay dutt go to us for treatment


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->