சல்மான்கானுக்கு இணையதளம் மூலம் வந்த கொலை மிரட்டல்: விசாரணையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் திரைத்துறையில் தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். 

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் காரணமாக ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென சல்மான் கானுக்கு இணையதளம் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. 

அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது, தாவூத் உங்களை காப்பாற்றுவார் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள். உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. 

சிந்து மூஸ் வாலாவின் மரணத்திற்கு உங்கள் பதில் கவனிக்கப்படாமல் இல்லை. நாங்கள் அவர் எப்படிப்பட்டவர் என்றும் அவருக்கு இருந்த குற்ற சம்பவங்கள் குறித்தும் அறிவோம். 

நீங்கள் விரும்பும் எந்த நாட்டிற்கும் தப்பிச் செல்லுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் மரணத்திற்கு விசா தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை பற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ் னோயின் கணக்கில் இருந்து மிரட்டல் வந்திருப்பது தெரியவந்துள்ளது. 

லாரன்ஸ் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை போலீசார் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salman khan gets another threat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->