ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் வேட்டை.. சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் இயக்குனர் ராஜமௌலி. அதன் பின் அவர் இயக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.  

இயக்குனர் ராஜமௌலி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜீனியர் என்டிஆரை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கினார்.இப்படம் கடந்த மார்ச் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஒரே நாளில் ஆந்திராவில் மட்டும் ஆர்.ஆர்.ஆர் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 200 கோடியை இரண்டு நாட்களில் எட்டி உள்ளது. 

தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் ரூ 30 கோடிக்கு மேல் ஆர்.ஆர்.ஆர் படம் வசூலித்துள்ளது. படக்குழு அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் முதல் வார முடிவில் ரூ 500 கோடி மேல் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 4.25 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாக வில்லை என்பதால், படம் மேலும் வசூல் சாதனை செய்ய வாய்ப்புள்ளது. பாகுபலி பட சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RRR first week movie collection


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->