திரையில் போட்டி – நிஜத்தில் நட்பு: போட்டி போட்டு ரிலீஸ் ஆன ரஜினி, கமல் படங்கள் - அதிக வெற்றிகளை குவித்தது யார்? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் இரு திலகங்கள் – ரஜினிகாந்தும் கமல்ஹாசனும். திரையரங்கில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் மிகப்பெரிய நட்சத்திரங்கள். இவர்களது நட்பு ஒருபுறம் இருந்தாலும், திரையில் நடந்த போட்டி தமிழ் சினிமா வரலாற்றில் நினைவில் நிற்கும் நிகழ்வுகளாகவே உள்ளது.

1983ம் ஆண்டு இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியானது தான் முதலாவது நேரடி மோதல். ரஜினியின் ‘தங்க மகன்’ மற்றும் கமலின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ஆகியவை ரிலீஸானது. இதில் கமல் படம் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

அடுத்த ஆண்டு, 1984 தீபாவளிக்கு வந்த ‘எனக்குள் ஒருவன்’ மற்றும் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படங்களில் ரஜினி படம் அதிக நாட்கள் ஓடி வெற்றிபெற்றது.

1985 தமிழ் புத்தாண்டில் வந்த ‘காக்கி சட்டை’ (கமல்) மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ (ரஜினி) ஆகிய இரண்டு படங்களும் ஹிட்டானாலும், கமலின் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

1986 தீபாவளிக்கு வந்த ‘ஜப்பானில் கல்யாண ராமன்’ (கமல்) மற்றும் ‘படிக்காதவன்’ (ரஜினி) ஆகியவற்றில், ரஜினி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது.

1987 இல் வந்த ‘புன்னகை மன்னன்’ கமலுக்கு 175 நாட்கள் ஓட்டிய வெற்றியைத் தந்தது, ‘மாவீரன்’ (ரஜினி) போட்டியிட்டாலும் அதன் வெற்றி இதைவிட மந்தமாக இருந்தது.

1989 தீபாவளிக்கு ‘மாப்பிள்ளை’ (ரஜினி) மற்றும் ‘வெற்றிவிழா’ (கமல்) போட்டியிட்டன. இதில் ரஜினி படம் முன்னிலை பெற்றது.

1990 பொங்கலுக்கு ‘பணக்காரன்’ (ரஜினி) கமலின் ‘இந்திரன் சந்திரன்’ படத்தை விட சிறப்பாக ஓடியது.

இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, 1991ல் கமல் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து ‘குணா’ திரைப்படத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் நடித்தார். இதே ஆண்டில் ரஜினி, மணிரத்னம் இயக்கத்தில் மகாபாரதத்தினை தழுவிய ‘தளபதி’ படத்தில் மாஸ் சப்ஜெக்டுடன் வந்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், ‘தளபதி’ பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

அடுத்த ஆண்டில், 1992ல் இருவரின் ‘தேவர்மகன்’ (கமல்) மற்றும் ‘பாண்டியன்’ (ரஜினி) ஒரே நாளில் ரிலீஸானது. இதில் கமல் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார்.

திரையில் மாறுபட்ட வெற்றிகள், தோல்விகள் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததோடு, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரே நேரத்தில் பல விதமான பங்களிப்புகளைச் செய்து வந்தனர். இவர்களின் திரைபோட்டி, ரசிகர்களுக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தந்த திரைப்பயணமாகவே அமைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rivalry on screen friendship in real life Rajinikanth and Kamal films that were released in competition who had the most hits


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->