சோகத்தில் திரையுலகம்: ''துணிவு'' திரைப்பட நடிகர் காலமானார்!
Rituraj Singh passed away
ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. இந்த திரைப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர், பவானி, அமீர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ரித்துராஜ் சிங் (வயது 59). பாலிவுட் நடிகரான இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சித்துராஜ் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரித்துராஜின் நண்பர் ஒருவர், இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சமீபத்தில் தான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரித்துராஜ் சிங் உயிரிழந்த செய்தி திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rituraj Singh passed away