ஒரு வருடமாக தாடி வளர்த்த விஜய் டிவி பிரபலம்.? இப்படி ஒரு காரணமா.?! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்தான் ரியோ ராஜ். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 2019 -ல் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு திரைப்படத்தின் நடித்ததன் மூலம் வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த திரைப்படமானது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது 2021-ல் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் அவர் நடித்திருந்தார். இதில், ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்தார். 

தற்போது ஹரிஹர ராம் இயக்குகின்ற ஜோ படத்தில் ரியோ நடித்துள்ளார்  இந்த திரைப்படத்தை டாக்டர் டி.அருள் நந்து தயாரிக்க சிந்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியது. 

இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை முடித்த ரியோ ராஜ் ஒரு வருடமாக இப்படத்திற்காக தான் தாடி வளர்த்ததாக கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜையை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கி வைத்தார். விரைவில் படம் வெளியிடும் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rio Grow Beard For 1 year


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal