கெத்து நடிகை ரீமாசென்னுக்கு இப்படி ஒரு கணவரா.? வைரலாகும் புகைப்படம்.!
reema sen family photo
மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. எனவே, இவர் விரைவாக ரசிகர்களிடம் பிரபலமானார். அதனை தொடர்ந்து, விஜய், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீமாசென் நடித்திருந்தார்.

இறுதியாக ரீமாசென் நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் வெளியாகியது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை. எனவே, மீண்டும் அவர் சினிமாவை விட்டு விலகினார்.
இத்தகைய சூழலில், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்ற ரீமாசென் தான் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தனது கணவர் மற்றும் மகனுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
