ஆர்.டி.எக்ஸ் பட இயக்குநர் நகாஸ் நடிகர் சூர்யாவுடன் நேரில் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டவில்லை.இந்தப் படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படபிடிப்பு அந்தமான், ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில்நடைபெற்று இருக்கிறது.

நடிகர் சூர்யாவை வைத்து கேரளாவில் சில காட்சிகளை படமாக்க படக்குழு சென்றுள்ளது. அங்கு படப்பிடிப்புக்கு இடையே, நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் நகாஸ். இந்தச் சந்திப்பின்போது 'ஆர்.டி.எக்ஸ்' தனக்கு மிகவும் பிடித்த படம் என்பதையும் நடிகர் சூர்யா கூறி இருக்கிறார்.

இந்தக் கூட்டணியின் திடீர் சந்திப்பை குறித்து திரையுலகில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றது. இதில் இந்த கூட்டணி விரைவில் இணைய இருக்கிறது எனவும். அதற்கான முதற்கட்ட சந்திப்பு தான் இது எனவும் கூறுகின்றனர் . 

நடிகர் சூர்யாவுக்காக படம் முழுவதும் ஆக்சன் நிறைந்த பின்னணியில் தயாரித்த கதையின் முன்னோட்டத்தை மட்டும் அவரிடம் தெரிவித்திருக்கிறார் 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் நகாஸ் விரைவில் முழு கதையையும் நடிகர் சூர்யாவிடம் தெரிவிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவை சந்தித்தது குறித்து 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் தனது சமூக வலைதள பக்கத்தில்  "எனது அபிமான நாயகன் சூர்யாவை சந்தித்தது ஒரு கனவு நினைவாதை போன்றது. அவரது பணி எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்தது. அவர் 'ஆர்டிஎக்ஸ்' படத்தை எவ்வளவு ரசித்தார் என்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. நடிகர் சூர்யாவை சந்தித்த தருணம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RDX movie director Nakas meets actor Surya in person


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->