மேடையில் கெனிஷாவை கட்டிப்பிடித்த ரவி மோகன்..! “இது காதல் அல்ல.. அதையும் தாண்டி” ரீ-கிரியேஷன்!
Ravi Mohan hugged Kenisha on stage This is not love it is beyond that re creation
நடிகர் ரவி மோகன் தற்போது நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என தனது கேரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விவாகரத்து விவகாரம் பேசப்பட்டு வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிஸியாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில், அவரது நெருங்கிய தோழி கெனிஷாவுடன் இணைந்து மேடையில் நிகழ்த்திய ஒரு ரொமான்டிக் நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் புகழ்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்” பாடலை ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து மேடையில் ரீ-கிரியேட் செய்தனர். படத்தில் வரும் உரையாடல் மற்றும் பாடல் பகுதியை அவர்கள் தனித்துவமாக மீண்டும் மேடையில் நிகழ்த்திய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதில், கமல்ஹாசன் பேசிய வசனங்களை ரவி மோகன் தனது ஸ்டைலில் சொல்ல, ஜானகி பாடிய வரிகளை கெனிஷா பாடினார். குறிப்பாக,“இது காதல்… என் காதல்… மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது…”
என்ற வரிகளை ரவி மோகன் உணர்ச்சிபூர்வமாக பேசியது ரசிகர்களிடையே கைதட்டலை பெற்றது. வசனங்களைச் சொல்லும் போது சில இடங்களில் அவர் சிரித்தபடி சொதப்பியதும், அதை ரசித்த கெனிஷாவின் ரியாக்ஷனும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
பாடல் முடிவில், கெனிஷாவை ரவி மோகன் கட்டிப்பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் “இது புரபோஸ் மாதிரி இருந்தது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சில நெட்டிசன்கள், “இளையராஜா இசையிலான பாடலை மேடையில் பயன்படுத்த அனுமதி வாங்கியிருக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எதுவாயினும், ரவி மோகன் – கெனிஷா இணைந்து நிகழ்த்திய இந்த ‘கண்மணி அன்போடு’ மேடை நிகழ்ச்சி தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
English Summary
Ravi Mohan hugged Kenisha on stage This is not love it is beyond that re creation