பிரபல சர்ச்சை நடிகைக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா.? வெளியான மருத்துவமனை புகைப்படம்.!
Rathika apte photo in hospital
உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று வரை கரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களின் எண்ணிக்கை 41 ஆக இருந்தது. இவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பிய நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அந்த புகைப்படத்தில் தான் மருத்துவமனையில் இருப்பது போல காட்சியளிக்கின்றது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த ராதிகா நான் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக இங்கே வரவில்லை. ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்து இருக்கின்றார்.
English Summary
Rathika apte photo in hospital