நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரணுடன் சேர்ந்து ஆடிய ஆனந்த் மஹிந்த்ரா.! - Seithipunal
Seithipunal


ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் தான் ஆர் ஆர் ஆர். இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த திரைப்படமானது ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நிறைய விருதுகளை வாரி குவித்தது.

கடந்த ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த 80ஆவது கோல்டன் குளோப் விருது விழாவில் இப்படத்தின் ஒரிஜினல் பாடலுக்கான விருதை எம் எம் கீரவாணி பெற்றார். இந்த பாடல் வரலாறை படைத்தது என்றே கூறலாம். இது தவிர தற்போது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டு நாட்டு பாடல் நடன அசைவுகளும் பாடல் வரிகளை பலரையும் கவர்ந்திருக்கும் விதமாக இருக்கின்றது.

 

இத்தகைய நிலையில் ஹைதராபாத்தில் நடந்த இ பிரிக்ஸ் ரேஸ் நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்  அப்போது இந்த பாடலுக்கான நடன அசைவை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ராம்சரணிடம் கற்றுக்கொண்டார். இதை வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் மகிழ்ச்சியில் லைக்ஸ்களை போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramcharan and ananth mahindra dance For nattu nattu song


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->