ராமராஜன்–நளினி விவாகரத்து கிசுகிசு: அழுதுகொண்டே இருந்தேன்..பல ஆண்டுகளுக்குப் பிறகு சேது பட நடிகை ஓபன் டாக்!
Ramarajan Nalini divorce gossip I kept crying Sethu actress opens up after many years
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் ராமராஜன். அந்தக் காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கே போட்டியாக வளர்ந்த நடிகராக ராமராஜன் பார்க்கப்பட்டார். குறிப்பாக கிராமப்புற ரசிகர்களிடையே அவர் பெற்ற அபார ஆதரவு, அவரது வளர்ச்சியை ஒரு கட்டத்தில் அச்சுறுத்தலாக மாற்றியதாக திரையுலகில் பேசப்பட்டது. ஆனால் உச்சத்தில் இருந்த போதே, ராமராஜன் திடீரென திரையுலகில் வீழ்ச்சியை சந்தித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
ராமராஜனின் திரைப்பயணத்தை முற்றிலும் மாற்றிய படம் ‘கரகாட்டக்காரன்’. கிராமிய கலைவடிவமான கரகாட்டத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் மெகா ஹிட்டாகி, அவரை மக்கள் மனதில் நிலையான இடத்தில் நிறுத்தியது. இதன் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ராமராஜனுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
திரையுலகில் பீக்கில் இருந்த காலத்திலேயே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ராமராஜன். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆரம்பத்தில் சீராக சென்ற திருமண வாழ்க்கை, பின்னாளில் பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் பிரச்னைகளுக்கு ஜாதகமே காரணம் என ஒரு தரப்பு கூற, இன்னொரு தரப்பு நடிகை **அபிதா**வை தொடர்புபடுத்தி கிசுகிசுகளை கிளப்பியது. இதுவே ராமராஜன் – நளினி விவாகரத்துக்கான காரணம் என்றும் பேசப்பட்டது.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சர்ச்சை குறித்து அபிதா மௌனம் கலைத்துள்ளார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ராமராஜன் என்னைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். அதனால்தான் அவருக்கும் நளினிக்கும் விவாகரத்து என்று எல்லாம் பேசினார்கள். அதை கேட்டபோது நான் மிகவும் மனம் உடைந்து அழுதேன். அந்த நேரத்தில் என் குடும்பம் தான் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த பேச்சுகள் எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தன. ஆனால் காலப்போக்கில், இப்படிப் பேசுவது சிலருக்கு ஒரு வேலை என்று நினைத்து விட கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தைத் தொட்ட ராமராஜன், பின்னர் நீண்ட காலம் திரையுலகிலிருந்து விலகி இருந்தார். பல வருடங்கள் கழித்து ‘சாமானியன்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அவரது திரைவாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய கிசுகிசுகளும் இன்றும் ரசிகர்களிடையே பேசுபொருளாகவே இருந்து வருகின்றன.
English Summary
Ramarajan Nalini divorce gossip I kept crying Sethu actress opens up after many years