கோபி முகத்திரையை குடும்பத்துக்கே அம்பலப்படுத்திய தாத்தா.! வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் 08.30 மணி முதல் 9 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பு செய்யப்படும். 

இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலில் இருந்து தற்போது செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் விலகியுள்ளார். சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார். 

கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை கரம் பிடிக்க முயற்சித்து வருகின்றார். பாக்யாவை விவாகரத்து செய்யும் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் கோபி மேற்கொண்ட நிலையில் அனைத்து உண்மைகளும் ராதிகாவுக்கு தெரியவந்துள்ளது. 

பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோபி குறித்த உண்மைகளை ராமமூர்த்தி குடும்பத்தினரிடம் கூறும் வகையில் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramamoorthi reveals everything to bakyalakshmi family


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal