ரஜினியின் பேட்ட படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது வரும் 10 ம் தேதியன்று திரைக்கு வருகிறது. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.

‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பட குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.

இந்நிலையில், பேட்ட படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடடி வருகின்றனர். 

English Summary

rajinikanth petta promo 3


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal