வெறும் 7 நாட்களில் வாயைபிளக்க வைக்கும் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்.. இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கலந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப், விநாயகன் ரம்யா கிருஷ்ணன் தமன்னா யோகி பாபு விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, வசந்த ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அதன்படி ஜெயிலர் திரைப்படம் வெறும் 6 நாட்களில், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மொத்த வசூல் ரூ450 கோடியை முறியடித்தது. தொடர்ந்து  ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக  ஓடிக் கொண்டிருப்பதால், இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.500 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இதனை ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth jailor collected 500 crores


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->