ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.! வெளியான அதிகாரபூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பில் இருந்த நான்கு பேருக்கு கொரோனவைரஸ் உறுதி செய்யப்பட்டது. எனவே, நடிகர் ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்று முடிவு வந்தது. 

இந்நிலையில், அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்த பின்னர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது நடிகர் ரஜினி சென்னையில் இருக்கின்றார். இந்நிலையில், அவரது ரத்த அழுத்த மாறுபாடு காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியது. அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் மேனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ரஜினி கீர்த்தி சுரேஷுடன் ரஜினி நடித்தாராம். இதுதான் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட காரணமாக கூறப்பட்டது. 

இத்தகைய சூழலில், ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், ரஜினியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 75 சதவீத படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini annatha movie release date


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,



Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,




Seithipunal