நடிகர் ரஜினிகாந்தின் 169வது திரைப்பட தலைப்பு ”ஜெயிலர்”.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 169 வது திரைப்பட தலைப்பு ”ஜெயிலர்”.

நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். 

கலவையான விமர்சனங்களை பெற்று வந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டாரை அடுத்ததாக யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் தலைப்பு ”ஜெயிலர்” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajini 169th movie title Jailer


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->