சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. விரைவில் ரிலீஸ்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர் உள்ளிட்டரின் நடிப்பில் வெளியாகிய படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே இது 200 கோடி பட்ஜெட்டில் தயரானது. மேலும், இந்த படம் ரூ. 650 கோடிகள் வரை வசூலித்தது.

2 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

 இதில் நடிகராக ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், நகைச்சுவை நாயகனாக வைகைப்புயல் வடிவேலு மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூர் உள்ளிட்ட பல பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது இதனை அடுத்து படத்தின் ரிலீஸ் ஆன போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அல்லது ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragava lawrence in chandramukhi 2 shooting wrapped


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->