என்ன உதவிகள் செய்யவும் தயார்.. எனது வீட்டையே தருகிறேன்.. நடிகர் பார்த்தீபன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் இருக்கும் யூகான் நகரில் இருந்து பரவ துவங்கிய கரோனா வைரஸானது, உலகளவில் 196 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும், உலகம் முழுவதிலும் 422,566 பாதிக்கப்பட்டுள்ளனர். 18,887 பேர் பலியாகியுள்ளனர்.

இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக இன்றிரவு 12 மணிமுதலாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வைரஸின் தாக்கத்தால் தினமும் உயிரிழப்புகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் ஏற்பட்டு வரும் நிலையில், நடிகர் பார்த்தீபன் காணொளிக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியில், இந்த நோய் குறித்து சிந்தித்துக்கொண்டு இருப்பதால் எனக்கு யோசனை வந்துள்ளது.

24 மணிநேரம் முழுவதுமாக இயங்கும் மருத்துவமனைகளை நாம் ஏன் உருவாக்க வேண்டும். இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை கரோனா மருத்துவமனையாக கொடுப்பதற்கு முன் வரலாம். எனக்கு சொந்தமாக 3 பிளாட் இருக்கிறது. இதனை கொடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன், தன்னார்வலம் கொண்ட உள்ளங்கள் இது போன்ற சேவையை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Radhakrishnan Parthiban about help


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal