ஷங்கரின் புது படத்தில், ஸ்டார் நடிகையா.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!  
                                    
                                    
                                   raashmika mandhana in sangar movie
 
                                 
                               
                                
                                      
                                            இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு தெலுங்கு நடிகரான ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். 
இதில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் சங்கர் அந்நியன் பட ரீமேக் பாலிவுட்டில் இயக்க இருக்கிறார். 

இந்த திரைப்படத்தில் முன்னதாக தென்கொரிய நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இணைந்து இயக்கவுள்ளார். 
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் மற்றும் திரில்லரை அடிப்படையாக கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக கியரா அத்வானியும், ஹீரோவாக ராம்சரணும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
                                     
                                 
                   
                       English Summary
                       raashmika mandhana in sangar movie