வைரலாகும் புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டர்.! 
                                    
                                    
                                   pushpa 2 movie new poster viral
 
                                 
                               
                                
                                      
                                            பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இந்தப் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசரும், பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இந்தப் படம் கடந்த 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
பின்னர், இந்தப் படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இதனையடுத்து, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
athil 'படத்தின் முதல்பாதி பணிகள் நிறைவுற்றது, படம் பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பும்' என்று பதிவிட்டும் உள்ளனர். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       pushpa 2 movie new poster viral