சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையை திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்.!
Producer Raveenthiran married actress mahalakshmi
தொகுப்பாளினியாக அனைவருக்கும் தெரிந்தவர் தான் மகாலட்சுமி. இவர் சீரியல் நடிகையாக வலம் வந்தார். சன் டிவி சீரியல் ஆன மக ராசி சீரியலில் தற்போது நடித்து வருகிறார். மேலும், மகாலட்சுமி குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இத்தகைய நிலையில், அவரது திருமண புகைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை அவர் திருமணம் செய்து கொண்டது தான்.

இது குறித்து ரவீந்திரன், "மகாலட்சுமி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்லுவாங்க. அந்த மகாலட்சுமியே வாழ்க்கையாய் கிடைச்சா. குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி." என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. 15 நாட்கள் கழித்து இவர்களது வரவேற்பு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும், இதற்கு பிரபலங்கள் அனைவருக்கும், அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Producer Raveenthiran married actress mahalakshmi