பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1942 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர் அமிதாப்பச்சன். இவர் கடந்த 1969 ம் ஆண்டு வெளியான ‘சாத் ஹிந்துஸ்தானி’ படத்தில் கோவா செல்லும் 7 இளைஞர்களில் ஒருவராக அறிமுகமாகி பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து, ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், இன்று தனது 80- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,

அமிதாப் பச்சன் ஜிக்கு 80-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர் இவர். நீண்ட நாள் நல்ல உடல் நலத்துடன் நீங்கள் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi wishes mega star Amitabh Bachchan on his birthday


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->