வெளியானது "பாட்டல் ராதா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
pattal radha movie first look poster released
தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் நல்ல ஹிட் கொடுத்து தனது மூன்றாவது படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார்.
இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'பாட்டல் ராதா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படம் மகிழ்ச்சி, பரவசம் மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டாராக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
pattal radha movie first look poster released