சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட 'பத்து தல' பட குழு.. சோகத்தில் ரசிகர்கள்.! 
                                    
                                    
                                   Pathu thala movie fans show cancel 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி மிக பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த நிலையில் சிம்பு பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ‘பத்து தல’ படத்திற்கு ரசிகர்கள் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட இல்லை. இந்த செய்தி சிம்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Pathu thala movie fans show cancel