விரைவில் தொலைக்காட்சிக்கு வருகிறது சிம்புவின் பத்து தல.!! - Seithipunal
Seithipunal


விரைவில் தொலைக்காட்சிக்கு வருகிறது சிம்புவின் பத்து தல.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இவர் காதல் அழிவதில்லை, சரவணா, கோவில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார். இதற்கிடையே இவர் சில பிரச்சனைகளால் சினிமாவிலிருந்து சற்று விலகியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அவரது நடிப்பில் வெளியான ‘மாநாடு’ ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்டத் திரைப்படங்கள் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிபில் 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோது, பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் பல முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

மேலும், இந்தத் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்தப்படமானது வருகிற ஜூலை 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paththu thala movie premier in zee tamil tv


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->