பதான் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிகழ்வு.. படம் வெளியான ஒரே நாளில் நடந்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான். இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

இந்த பாடல் இதுவரை 15 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து யூடியுப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கின்றது. இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார். 

இதற்கு, காவி உடை அணிந்து இந்து மதத்தை இழிவு படுத்துவதாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இத்தகைய நிலையில் படம் வெளியாகிய சில மணி நேரங்களில் HD பிரிண்ட் ஆக இணையதளத்தில் படம் கசிந்துள்ளது பட குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் தான் திரைப்படத்தின் HD வெர்ஷன் வீடியோ வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan Movie in Telegram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->