வாவ்.. அசத்தல் லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.?! வெண்ணிற ஆடையில் வேறமாரி ஃபோட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியலாகும். அண்ணன் தம்பி செண்டிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் கூட்டுக்குடும்ப‌ சப்ஜெக்ட்டை முன்னிறுத்தும் விதமாக அமைந்திருக்கும். 

இதில் அந்த அண்ணன் மனைவியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ். நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். சுஜிதாவுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக இருக்கின்றனர். சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். 

ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சுஜிதா நடித்திருக்கிறார். இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டதாக சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

கடந்த 2012 ஆம் ஆண்டு சுஜிதாவிற்கு தனுஷ் என்பவருடன் திருமணமாகியது. இவருக்கு தன்வின் என்ற மகன் சுஜிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது சுஜிதா 
வெள்ளை கவுனில் அழகான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pandiyan Stores sujitha Photoshoot in white dress


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->