ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.! ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.!
Pandiyan stores Sujitha Different reels viral
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த சீரியலில் மூர்த்தியாக ஸ்டாலின் தனமாக சுஜிதா மற்றும் இவர்களுக்கு தம்பிகள் இருக்கின்றனர். இந்த சீரியல்4 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இந்த அண்ணன் தம்பிகளுக்கு அம்மாவாக நடித்து வந்த நடிகை ஷீலா இறந்துவிட்டதை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி வரும் காட்சிகளும் காட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது தனத்திற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமான முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் சித்ரா நடித்துவந்தார். அவரது இறப்புக்கு பின் இந்த கதாப்பாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது தனம் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்து இருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடீயோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Pandiyan stores Sujitha Different reels viral