ரஜினியை இயக்க வேண்டிய வாய்ப்பு நெல்சனால் நழுவியது-வெங்கட் பிரபு OPEN TALK - Seithipunal
Seithipunal


ரஜினியை வைத்து படம் இயக்கவிருந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கைநழுவி போன அந்த சம்பவம் குறித்து வெங்கட் பிரபு பேசியது வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர்  விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி  ரிலீஸாகும் சூழலில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, முதல் படத்தை இளைஞர்களுக்கு ஏற்றவாறு அளித்து வெற்றி பெற்றார். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்றவராக மாறிவிட்டார். வெங்கட் பிரபு. மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த 'சிவகாசி' படத்தில் வெங்கட் பிரபு நடித்துள்ளார்.

இந்த நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்க கிடைத்த வாய்ப்பு கைநழுவியது குறித்து வெங்கட் பிரபு பேசிய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,  "ரஜினி சாருக்கு நான் ஒரு கதையை கூறினேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. எனவே ரஜினியை இயக்குவது உறுதிதான் என்று நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நெல்சன் பெற்றுவிட்டார். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காதது அப்செட்தான் என்றாலும் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opportunity to direct rajini missed by nelson venkat prabhu open talk


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->