விரைவில் தனக்கு திருமணமா.?! நடிகை நித்யா மேனன் அவரது வாயால் வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகை நித்யா மேனன் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக நித்யா மேனன் நடித்து வருகிறார். 

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை நித்யாமேனன் பெற்றுள்ளார். அவரது முதல் விருதை பெற்ற போது அவருக்கு 17 வயதுதான். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். 

தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். மேலும்,அவர் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில், திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுவது நித்யா மேனனின் திருமணம் குறித்த விஷயம்தான். 

மலையாளத்தில் ஒரு உச்ச நடிகராக இருக்கும் ஹீரோவை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், தற்போது நடிகை நித்யா மேனன் இதுகுறித்து, ''சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் எனது திருமணம் பற்றி செய்திகளில் உண்மை இல்லை. யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithya menon about her marriage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->