புதிய வீடியோ ரிலீஸ் செய்த ரத்தம் படக்குழு.! - Seithipunal
Seithipunal


புதிய வீடியோ ரிலீஸ் செய்த ரத்தம் படக்குழு.!

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஒரு வித்தியாசமான அரசியல் திரில்லர் திரைப்படமாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, இந்தப் படத்திலிருந்து அறிவு எழுதி பாடிய "ஒரு நாள்" என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மஹிமா நம்பியார் நடனமாடும் காணொலி ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new vedio released raththam movie team


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->