நேர்கொண்ட பார்வை படம்  குறித்து வெளியான புதிய அப்டேட்., அதிகார்வபூர்வாமாக அறிவித்த படக்குழு!! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். தமிழில் ரீமேக் செய்யப்படும் இந்த பாடத்தை போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கிறார். இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அஜித்தை எதிர்த்து வாதாடும் ழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார் இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்தநிலையில் படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new update for ajith film


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->