netflix முட்டாள் தனமான விஷயங்களை செய்து வருகிறது...! - அனுராக் காஷ்யப்
Netflix is doing stupid thingS Anurag Kashyap
பிரபல ஹிந்தி மற்றும் தென்னிந்தியா திரையுலக நடிகரான 'அனுராக் காஷ்யப்' நெட்பிலிஸ் குறித்து தெரிவித்ததாவது, “ நெட்பிளிக்ஸ் OTT தளம் இந்திய திரையுலகை புரிந்து கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் தவிர்த்த ‘ஸ்கேம் 1992’ வெப் தொடர், சோனி லைவ் அதன் பிறகு தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர் வெற்றியடைந்ததும், ‘இதை நிராகரித்தது யார்? அவரை பணியிலிருந்து நீக்குங்கள்’ என முடிவு செய்தது அந்நிறுவனம்.
இப்படித்தான் அவர்கள் செயல்படுகின்றனர்.நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் நடந்த கதைகளை, ஸ்கேம்களை படமாக்குவதில், வெப் சீரீஸ்களாக ஆக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அவர்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ளாததால் பல முட்டாள் தனமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் நல்ல நல்ல இந்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
வெளிநாட்டு கதைகளை இங்கே விற்பனை செய்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்” என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
English Summary
Netflix is doing stupid thingS Anurag Kashyap