நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இடையில் இப்படியொரு விஷயமா?.. வெளிவந்த தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நடிகையில் மிக முக்கியமானவர் நயன்தாரா. 

நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் காதல் வயப்பட்டு, ஆறு வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த ஜூலை 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். 

இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு வீடியோ கவரேஜ் உரிமை ரூபாய் 25 கோடிக்கு நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 

ஜவான் திரைப்பட விழாவிற்கு மும்பைக்கு சென்று இருந்த நயன்தாரா மீண்டும் சென்னை வந்த நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியானது. 

விக்னேஷ் சிவனின் மீது நயன்தாரா கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், விக்னேஷ் - சிவன் திருமணத்திற்கு முன்பு தங்கமே, கண்மணியே என நயனை இன்ஸ்டாவில் கொஞ்சி வந்த சூழலில் திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு இல்லாமல் இருப்பது சண்டையாகியிருக்கலாம் என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara Vignesh Shivan Fight


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal