நயன்தாராவின் 'மண்ணாங்கட்டி' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!  - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாராவின் 'மண்ணாங்கட்டி' படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகை நயன்தாரா நடித்த திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதனை தொடர்ந்து இவர் 'இறைவன்' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகி பாபு நடிக்கிறார். 

இந்த படத்துக்கு 'மண்ணாங்கட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல யூட்யூப் சேனலில் புகழ்பெற்ற டூட்  விக்கி என்பவர் எழுதி இயக்குகிறார். 

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara Starrer first Look Poster


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal