வலைத்தளங்களில் வைரலாகும் நயன் - நஸ்ரியா புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் ’ராஜா ராணி’ படத்தில் கதாநாயகிகளாக நடித்திருந்த நயன்தாரா மற்றும் நஸ்ரியாவின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இருவருக்கும் படத்தில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்றாலும் நல்ல நட்பு இருந்தது.

இந்தப் படம் நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரின் சினிமா வாழ்க்கையில் நல்ல பிரேக் கொடுத்தது. அதன் பிறகு நஸ்ரியா சில படங்கள் மட்டுமே நடித்தார். பின்பு பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ஃபஹத்துடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவர் சமீபகாலமாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நஸ்ரியா, நயன்தாரா, பஹத் மற்றும் விக்னேஷ்சிவன் நால்வரும் நேரில் சந்தித்து உள்ளனர். நயன் மற்றும் நஸ்ரியா இருவரும் முத்தமழை பொழிந்துள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த நஸ்ரியா ‘ஒரு வழியாக மீண்டும் நாங்கள் சந்தித்து விட்டோம். எவ்வளவு அன்பு! யாரெல்லாம் இந்த நாளுக்காக எதிர்பார்த்து இருந்தீர்கள்?’ என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nayanthara and nazriya photos viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->