தேசிய திரைப்பட விருதுகள் : பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு விருதினை பெற்றார் இயக்குனர் மணிரத்னம்! 
                                    
                                    
                                   National film awards director mani ratnam won the award for ponniyin selvan
 
                                 
                               
                                
                                      
                                            இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கிடையே  70வது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும், திருச்சிற்றம்பலம்  என சில திரைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், 2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில்,  நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.  
இந்த விருதுகளில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், சிறந்த பின்னணி இசைக்கு ஏ.ஆர்.ரகுமான்,  சிறந்த ஒலிப்பதிவிற்கு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.
மேலும் சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ள நிலையில், இதற்கான விருதினை  ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து, படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் . மணிரத்னம் விருது வாங்கும் போது நடிகை குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார். மேலும் இயக்குனர் மணி ரத்னம் இது 7 வைத்து முறையாக பெரும் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       National film awards director mani ratnam won the award for ponniyin selvan