திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜன் வரலாறு.? ஹீரோ இவரா.?!  - Seithipunal
Seithipunal


இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அளவில் எந்த விளையாட்டு வீரரின் திரைப்படமும் வந்ததில்லை. அதிலும் தமிழ் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் குறித்து படங்கள் எடுக்கப்பட்டது இல்லை. இந்நிலையில் தங்கராசு நடராஜனின் கதையை படமாக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

சாதாரண நெசவு தொழிலாளி மற்றும் சிக்கன் பக்கோடா கடை வைத்திருந்தவர்களின் மகன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி நண்பர்களின் உதவியால் சென்னைக்கு வந்து டிஎன்பிஎல், ஐபிஎல் என்று கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் தங்கராசு நடராஜன். 

நடராஜனுக்கு பெருமை : இந்தியாவின் முதல் வீரர்! சர்வதேச அளவில் 17 ஆவது வீரர்!  - Seithipunal

இளைஞர்களுக்கு உதவி பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர், டேவிட் வார்னரின் செல்ல பிள்ளையாக இருப்பவர்தான் நடராஜன். இவர் பலரது நம்பிக்கைக்குறிய பாத்திரமாக இருக்கின்றார். தம்மை போல கிரிக்கெட்டில் முன்னேற மற்றவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று தனது செலவில் சேலத்தில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை உருவாக்கி இளைஞர்களுக்கு உதவி செய்து வருகின்றார். 

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா.?! அதிர்ச்சி தகவல்.! -  Seithipunal

இப்படி உழைப்பால் உயர்ந்த நடராஜனின் வாழ்க்கை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராகவும், எதிர்நீச்சல் படத்தில் ஓட்டப்பந்தய வீரராகவும் அவர் நடித்திருக்கிறார். 

நடராஜன் வாழ்க்கை திரைப்படம் எடுக்கப்பட்டு அதில் சிவகார்த்திகேயன் நடித்தால் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

natarajan bio pic movie may come


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->