பொன்னியின் செல்வனுடன் போட்டியிட்ட நானே வருவேன்.. 4 நாள் முடிவில் வசூல் இதோ.!
Nane varuven movie day 4 collection results
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான தனுஷ் தற்போது 'நானே வருவேன்' திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை செல்வராகவன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த 2011 வெளியான 'மயக்கம் என்ன' திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் மீண்டும் வெளியாக உள்ளதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தின் படிப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.
'நானே வருவேன்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 300 முதல் 350 திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் 4 நாட்கள் முடிவில் ரூ.30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Nane varuven movie day 4 collection results